102 கன அடியாக குறைந்த குடிநீர்..!! தமிழ்நாடு நீர் வாரியம் அறிவிப்பு..!!
சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் 5 ஏரிகளில் 38.04% நீர் இருப்பு மட்டுமே உள்ளது. அதே சமயம் புழல் ஏரியில் நீர்வரத்து 102 கன அடியாக குறைந்துள்ளது என தமிழ்நாடு நீர் வாரியம் தெரிவித்துள்ளது.
3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டுள்ள ஏரியில் இருந்து நீர்இருப்பு 2490 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது., சென்னைக்கு வழங்கப்படும் குடிநீருக்காக 178 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.. அதே சமயம் 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 98 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது என்பதால் வினாடிக்கு 10% கன அடி தண்ணீர் திறக்கப்படும் தமிழ்நாடு நீர் வாரியம் தெரிவித்துள்ளது..
500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டுள்ள கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 307 மில்லியனாக அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீரானது செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் இருந்து வழங்கப்படுகிறது.., தற்போது இந்த 5 ஏரிகளிலும் 38.04% நீர் இருப்பு உள்ளது. எனவே 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவானது 11.757 டிஎம்சியில் தற்போது 4.472 டிஎம்சி மட்டுமே நீர்இருப்பு இருக்கிறது..
செம்பரம்பாக்கம் ஏரியில் 40.9% அளவும், புழல் ஏரியில் 75.45% அளவும், பூண்டியில் 2.66% அளவும், சோழவரம் ஏரியில் 9.06% அளவும், கண்ணன்கோட்டையில் 61.4% நீர் இருப்பு உள்ளதாக தமிழ்நாடு நீர் வாரியம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..