நாளை கூடும் அரசியல் பிரமுகர்களின் கூட்டம்…! எங்கே தெரியுமா..?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தொகுதி பங்கீடு மிகவும் சுமுகமாக நடந்து முடிந்தது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காணொலிக் காட்சி வாயிலாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.