தோழியின் காதலை போட்டு கொடுத்த தோழி..!! காதலன் செயலால் தற்கொலை..!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மோசூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் சக்தி. இவர் ஆற்காட்டில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடன் படிக்கும் மாணவி ஒரு கஞ்சா குடுக்கி வாலிபரை காதலித்து வந்துள்ளார் . மேலும் தோழியிடம் இது தவறு என கண்டித்துள்ளார். ஆனால் அப்பெண் அதனை பொருட் படுத்தாமல் மீண்டும் காதலித்து வந்துள்ளார். இதில் கோபமடைந்த சக்தி தோழியின் மீதுள்ள அக்கரையால் காதல் விவகாரத்தை மாணவியின் அண்ணனிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் மாணவியின் காதலன் மற்றும் இன்னொரு வாலிபர் சேர்ந்து சக்தியை ஆபாசமாக பேசி உள்ளனர். இதில் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி சக்தி கல்லூரி துறை தலைவரிடம் தெரிவித்துள்ளார். அவர் எதையும் கண்டு கொள்ளாத நிலையில் தான் படிக்கும் கல்லூரியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து சக்தி சக்தி முயற்சி செய்துள்ளார். மாடியில் இருந்து குதித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கல்லூரியில் இருந்தவர்கள் மாணவி சக்தியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆற்காடு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.