தேங்காய் எண்ணெய் செய்யும் அதிசயம்..!
வெந்நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது உப்பு போட்டு குடிக்கும்போது வாய் துர்நாற்றம் நீங்கும்.
புதினா இலைகளை காயவைத்து பொடி செய்து பற்களை துலக்குவதினால் வாய்நாற்றம் நீங்கும். பற்களும் பளிச்சென்று மாறும்.
தொடர் தும்மலுக்கு சோம்பில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட் சிறந்த தீர்வாக அமையும். சூடான நீரில் சோம்பை போட்டு கொதிக்கவைத்து வடிக்கட்டி அந்த நீரை வாரத்தில் 3 முறை குடித்து வர தொடர் தும்மல் குணமாகும்.
மஞ்சள் சேர்த்த சூடான நீரினால் வாயை கொப்பளிக்கும்போது சளி முறிந்து வெளியேறும். தொண்டையில் இருக்கும் புண்களும் ஆறும்.
தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு தினமும் ஆயில் புல்லிங் செய்து வர பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கும். ஈறு நோய்கள் நீங்கி, துர்நாற்றம் விலகி புத்துணர்ச்சியாக இருக்கும்.
கடுக்காய் கஷாயத்தை வாயில் வைத்து கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் சரியாகும்.
சூடான நீரில் சிறிது எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து உணவிற்கு முன் மூன்று வேளையிலும் குடித்து வர தொண்டையில் இருக்கும் தொந்தரவுகள் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும்.