திருவண்ணாமலை தீபத்திருவிழா பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு…!!
ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது., அந்த வகையில் இந்த ஆண்டு பெஞ்சல் புயல் எதிரொலியால் அங்கு மண் சரிவு ஏற்பட்டு., பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் பெஞ்சல் புயல் துணை சபாநாயகர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். பெஞ்சல் புயல் பாதிப்பிற்கு பின் திருவண்ணாமலை கிரிவலம் மலைப்பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர்கள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் தீபத் திருநாளில் மலையேறி சென்று தீபத்தை காண அனுமதிப்பது குறித்து வல்லுநர் குழு ஆய்வறிக்கை கிடைத்தவுடன், முதலமைச்சர் உடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் பரணி தீபத்தன்று 300 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிகமானோரை மலை மீது ஏற்ற கூடாது என நிபுணர் குழு அறிவித்திருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..