“ஒரு சூறாவளி கிளம்பியதே” ஹமூன் புயல் எச்சரிக்கை..!! இடியமின் சொன்ன அப்டேட்..?
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஹமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
நேற்று முன்தினம் காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை அதே இடத்தில் நிலவியது.
இது வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஓட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள “ஹமூன்” புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையில் புயல் நகர்ந்து செல்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில், ஒரு சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழையும், நாளை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..