ஆவடி அருகே தடம் புரண்ட மின்சார ரயில்..!! விபத்தின் காரணம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!! பீதியில் பயணிகள்..!!
சென்னை ஆவடி அருகே மின்சார ரயில் ஒன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.., விபத்து ஏற்பட்ட பின் வந்தே பாரத்.., சாகப்தி எக்ஸ்பிரஸ்.., கோவை டூ சென்னை சென்ட்ரல் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன..
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஆவடி அருகே தடம் புரண்டுள்ளது.., அன்னனூரை அடுத்து இந்த விபத்து நேர்ந்துள்ளது..
தடம் புரண்ட நான்கு பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிருக்கும் சேதம் இல்லை.., ஆனால் இந்த திடீர் விபத்திற்கு என்ன காரணம் என தெற்கு ரயில்வே மேலாளர் கவுசல் கிஷோர் மேற்பார்வையிட சென்றிருந்தார்.. அப்போதே சில அதிர்ச்சி தகவல் வெளியானது.
சென்னை சென்ட்ரலில் இருந்து இரயிலை இயக்கி வந்தவர் ஒரு வடமாநில இஞ்சினியர்.., கவனக்குறைவின் காரணமாக இரயில் சிக்னலை கவனிக்கமால் விட்டுள்ளார்.., இதனால் தண்டவாளம் மறுசீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்த பாதையில் மின்சார ரயில் சென்றதால் விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணம் இரயில் இன்ஜினியரின் கவன குறைவு மட்டுமே என தெற்கு ரயில்வே மேலாளர் செய்தியாளர்கள் முன் தெரிவித்துள்ளார்..
Discussion about this post