வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! வ.உ.சி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை..!!
வட கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இந்திய வானிலை ஆய்வுதுறை மற்றும் மண்டல வானிலை ஆய்வு மையம் சென்னை அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபப்பட்டுள்ளது.
வங்ககடலில் வட கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு வடமேற்கு திசையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது.
இதை தொடர்ந்து சென்னை இந்திய வானிலை ஆய்வுத்துறை மண்டல வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கையின் படி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் காலங்களில் அதன் தீவிரத்தைப் பொறுத்து 1 முதல் 11 வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படும்.
இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக பொருள்.
துறைமுகங்கள் பாதிக்கப்படாமல் பலமாக காற்றுவீசும். எனவே, மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன் படி தற்போது ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..