காதலனை கத்தியால் குத்தி கொன்ற கல்லூரி மாணவி..!
புனேவில் உள்ள வகோலி என்ற பகுதியில் ராய்சோனி என்ற கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் யஸ்வந்த் மற்றும் அனுஜா என்ற மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.
நாளடைவில் இந்த காதல் பழக்கம் இருவருக்கும் தனிமை உணர்வை தூண்டியுள்ளது. யஸ்வந்த் புனேவில் வீடு ஒன்று எடுத்து மற்ற நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார். ஒரு நாள் இரவு காதலனுடன் இருப்பதற்காக சென்ற அனுஷ்யா, யஷ்வந்துடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்கு வாதம், இருவருக்கும் கைகலப்பை ஏற்படச் செய்துள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த அனுஜா சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து காதலன் யஸ்வந்தை குத்தியுள்ளார்.
இதில் அனுஷ்யாவிற்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அங்கு வந்த பகுதி மக்கள்.., இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கவே, போலீஸ் விசாரணையில் இந்த சம்பவம் குறித்து தெரியவந்தது.
Discussion about this post