கதாநாயகனாக களம் இறங்கும் விஜயகாந்த் மகன், சண்முக பாண்டியன்..!
தமிழ் சினிமாவில் அசத்தி, கதா நாயகனாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும், மக்கள் மனதில் கேப்டன் என்று பெயர் பதித்தவர் விஜயகாந்த். அரசியலிலும் பலரின் மனதில் இடம் பிடித்தவர் . தற்போது உடல் நல பிரச்சனையால் இவர் அரசியலில் ஈடுபட வில்லை என்று அனைவருக்கும் தெரியும்.
இவரின் மகன் சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படத்தின் மூலம் 2015ல் கதாநாயகனாக அறிமுகமானர். 2018ல் மதுரை வீரன் என்ற படத்திலும் கதா நாயகனாக நடித்தார். மக்கள் மனதில் கதாநாயகனாக இடம் பிடிக்க முடியாததால், வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றுவிட்டார்.
போறது வேணும்னா படிக்குறதுக்கா இருக்கலாம்.., ஆனா திரும்பி வருவது ஹீரோ வாக தான் எனும் நம்பிக்கையில்,
தற்போது சசிகுமார் இயக்கத்தில் குற்றப்பரம்பரை என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து வெப் சீரியஸ் மற்றும் வால்டர் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் காந்தார ஸ்டைலில் உருவாக்க இருப்பதால், கட்டாயம் மக்கள் மனதில் ஹீரோவாக கால் பதிப்பார் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.
Discussion about this post