வீட்டுக்குள் பட்டாம்பூச்சி வந்தால் இப்படி நடக்குமா..?
ஒவ்வொரு உயிரினத்திற்கும் நம் வீட்டிற்குள் வருவதனால் சில அறிகுறிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த வரிசையில் நாம் வசிக்கும் வீட்டில் வண்ணத்துப்பூச்சு வந்தால் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதை இப்போது காணலாம்.
வண்ணத்துப்பூச்சு என்பது ஒருவர் வசிக்கும் வீட்டினுள் வருவது நல்ல காரியமாக சொல்லப்படுகிறது.
பட்டாம்பூச்சு வருவதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு லஷ்மி தேவியின் பரிபூரணமான ஆசி கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த வீட்டில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கி வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏதோ அவர்கள் நினைக்கும் நல்ல விஷயம் நடக்கப்போவதாக அர்த்தம்.
வீட்டில் திருமண வயதில் நபர்கள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் கைக்கூடும்.
அதிலும் வீட்டிற்கு வரும் பட்டாம்பூச்சு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவர்களுக்கு நல்ல அதிஷ்டமும் செல்வ செழிப்பும் அதிகரிக்கும்.
நீல நிறத்தில் இருக்கும் பட்டாம்பூச்சு வீட்டிற்கு வந்தால் அந்த வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
இதுவே சிவப்பு நிறத்தில் இருக்கும் பட்டாம்பூச்சு வீட்டிற்கு வந்தால் நிதியை அதிகரித்து நோய்களை விரட்டுகிறதாம்.
வெள்ளை நிறத்தில் வண்ணத்துப்பூச்சு வீட்டிற்கு வந்தால் அது தூய்மையை குறிக்கிறது.
நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நம் மீது வண்ணத்துப்பூச்சு அமர்ந்தால் அது நல்ல காரியமாக கூறப்படுகிறது.
