ஊத்தங்கரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 60 வயது ஆண் கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட க.பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் (60). இவரது அத்தை பேரன் க.பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (32).
இவர்கள் இருவரும் இரவு குடிபோதையில் கே..பாப்பாரபட்டி பகுதியில் சந்தித்தனர். அப்போது, இவர்களுக்கு இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்புக்கு சென்றது. அப்போது, பன்னீர், மகேந்திரனின் ஸ்கூட்டியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மகேந்திரன், பன்னீரின் தலையில் இரும்பு ஆயுதம் கொண்டு அடித்தார். இதில் பன்னீருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே பன்னீர் இறந்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து சாம்பல்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பன்னீரின் உடல் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.