4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன்..!
புதுச்சேரி மாவட்டம் வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த 4 1/2 வயது சிறுமி நேற்று காணவில்லை என்பதால் பதறி போன பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். நீண்ட நேரம் கழித்து சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு வர, சிறுமியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர்.
அப்பொழுது அதே தெருவை சேர்ந்த கார்த்தி என்று 17 வயது சிறுவன் விளையாட்டு காட்டுவதாக கூறி தினமம் சிறுமியுடன் பழகி வந்துள்ளான்.., சிறுமியின் பெற்றோரும் வீட்டிற்கு வெளியே சிறுமி விளையாடுவதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுள்ளனர்.
தினமும் சிறுமியிடம் விளையாடும் பொழுதை பாலியல் ரீதியாக பழகி வந்துள்ளான்.., அதை பற்றி விவரம் அறியாத அந்த பிஞ்சு குழந்தை அந்த 17 வயது நய வஞ்சகனுடன் பழகி வந்துள்ளாள். நேற்று மாலை சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி கடலோர பகுதிக்கு தனியே அழைத்து சென்றுள்ளான்.
அங்கு கஞ்சா அடித்து விட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான், வலி தாங்க முடியாமல் சிறுமி அழுதுள்ளாள் அப்பொழுது அந்த சிறுவன் சிறுமியின் வாயை துணியால் கட்டி கொடுமை செய்துள்ளான்.
அழுகை சத்தம் கேட்டு அங்கு வந்த கடலோர பகுதி மக்கள் ஒருவர் அந்த நய வஞ்சகனிடம் இருந்து சிறுமியை மீட்டுள்ளார். பின் சிறுமியை அந்த 17 வயது வஞ்சகனை போலீசில் பிடித்து கொடுத்துள்ளார்.
பின் காவல் துறை உதவியுடன் சிறுமியின் வீட்டில்.., சிறுமியை சேர்த்துள்ளனர். பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின் அந்த 17 வயது சிறுவனை போக்சோ வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
Discussion about this post