15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!! இளைஞருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
குத்தாலம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததால் போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போக்சோ வழக்கில் குற்றத்தை உறுதிப்படுத்தி இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில், குத்தாலத்தைச் சேர்ந்த ராஜா மகன் ராஜேஷ் என்ற இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குத்தாலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு, ராஜேஷ் குற்றவாளி அல்ல என்று கடந்த 2017-ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், திருச்சி மண்டல ஐ.ஜி உத்தரவுப்படி, இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நாகை சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ்(29) குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து குத்தாலம் போலீஸார் ராஜேஷை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, திறம்பட நீதிமன்ற அலுவல் புரிந்த குத்தாலம் போலீஸாரை திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சாவூர் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் ஆகியோர் பாராட்டினர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..