10 சவரன் தங்க நகை கொள்ளை..!! போலீசில் சிக்கிய கொள்ளையர்கள்..!! விசாரணையில் வெளிவந்த பல தகவல்கள்..!!
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மூன்று குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். பத்து சவரன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியில் குட்கா உட்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும்., வாலாஜா போலீசுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது அதன் பேரில் காவல் காவல்துறையினர் வீ,சி, மோட்டார் பகுதி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சந்தேகிக்கும் விதமாக வந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்துள்ளனர்.,
இதில் சந்தேகம் அடைந்த காவலர்கள் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை செய்த போது ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த குமார் என்பதும் மேலும் இவர் தனது நண்பர்களான ஏழுமலை மற்றும் சக்திவேல் ஆகியோருடன் இணைந்து ஒழுகூர் அம்மணதாங்கள் ஆகிய பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து மூன்று நபர்களின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.. பின்னர் மூன்று நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..