வீரம் விளைந்த திருநெல்வேலிக்கு இன்று 233வது பிறந்த நாள்..!!
நெல்லை மண்ணின் வாசம், வீரம் சொல்லும் அருவா, பாசமோடு பேசும் மக்கள், அதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் “ஏலே” என்ற சொல். நோய் தீர்க்கும் குற்றாலம் அறிவி, மகிழ்ச்சி கொடுக்கும் தாமிரபரணி ஆறு, தித்திக்கும் “அல்வா” 2000ம் ஆண்டு பழமை வாய்ந்த பாண்டிய மன்னன் வணங்கிய நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் கோவில்.
நெல்லையப்பர் – காந்திமதி கோயில் :
நெல்லையின் பெருமை மிக்க சிறப்பே நெல்லையப்பர் – காந்திமதி கோயில்தான். பாண்டிய மன்னனால் இக்கோவில் கிபி 700ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவபெருமான் தன்னுடைய ருத்ர தாண்டவம் ஆடிய இடங்களில் இந்த கோவிலும் ஒன்றாக நம்பிக்கை நிலவுகிறது.
தாமிரபரணி :
பொதிகை மலையில் பிறந்து, நெல்லை ஆற்றை கடந்து, தூத்துக்குடியில் கடலில் இணைகிறது. காசிக்கு நிகரான பாவம் போக்கும் தலமாக என்றும் “தாமிரபரணி ஆறும்” , “பாப நாசம்” இருக்கும்.
திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா :
நெல்லையப்பர் கோவிலின் முன்புறம், மாலை இருட்டும் நேரத்தில் திறக்கப்படும் இந்த இருட்டுக் கடை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் மூடிவிடும்.
அதற்கு காரணம் அங்கு விற்கப்படும் சுவை மிகுந்த அல்வாவும், அங்கே கூடும் கூட்டமும்தான்.
பாளையங்கோட்டை :
தென்னிந்தியாவின் “ஆக்ஸ்போர்ட்” என்று சொல்லப்படும் “பாளையங்கோட்டை” திருநெல்வேலியின் ஒரு பகுதியாக இருக்கிறது. 200 ஆண்டிற்கும் மேலாக இங்கு கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
குறுக்குத்துறை முருகன் கோயில் :
திருநெல்வேலியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில் தாமிரபரணி ஆற்றின் பின் ஓடும் பாதையில் “குறுக்குத் துறை முருகன் கோவில்” அமைந்துள்ளது. தாமிரபரணியில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.
இரட்டைப் பாலம் :
இந்தியாவிலேயே முதன்மையாக கட்டப்பட்ட பாலம் எதுவென்று கேட்டால் பெருமையோடு சொல்லும் வகையில் அமைந்து இருப்பது ” இரட்டைப் பாலம்” .
இன்று திருநெல்வேலியின் பிறந்த நாளிற்கு திருநெல்வேலி காவல் ஆணையர்கள் இன்ஸ்ட்டா பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக ஒரு போஸ்ட் செய்துள்ளனர்.
Discussion about this post