தனியார் ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ளது தனியார் பிரியாணி ஹோட்டல் இங்கு நாமக்கல் மருத்துவ கல்லூரியில் பயிலும் சக மாணவிக்கு பிறந்தநாளை ஒட்டி பிரியாணி சாப்பிட 8 மாணவர்களும் 7 மாணவிகளும் நேற்று முன்தினம் சென்றனர். இவர்களுடன் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்த தவக்குமார் மகள் கலையரசி 14 மற்றும் அவருடைய மனைவி மைத்துனர்கள் உள்ளிட்ட நான்கு பேர் ஹோட்டலில் சமர்வா பார்சல் வாங்கி வந்தனர்.
இதற்கிடையில் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவிகள் 13 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி நேற்று நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தனர் இதற்கிடையில் பிரியாணி விற்பனை கடைக்கு மாவட்ட நிர்வாகிகள் உணவு சோதனை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதற்கிடையே சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த கலையரசி என்ற மாணவி மற்றும் அவரது அம்மா சுஜாதா அத்தை கவிதா மாமா பூபதி மாமன் மகள் சுனோஜி ஆகியோர் சவர்மா சாப்பிட்டனர். இவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்படவே கலையரசி மட்டும் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள நிர்மலா மருத்துவமனையில் மாலை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர் பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பினார். இதற்கிடையில் மற்ற நால்வருக்கும் வயிற்றுப்போக்கு வாந்தி அதிகமாகவே நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
இந்த நிலையில் வீட்டுக்கு திரும்பிய கலையரசி வாந்தி மயக்கம் அதிகம் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. மீதி உள்ளவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதற்கிடையில் இறந்த மாணவி உடலை நாமக்கல் அரசு பிரேத பரிசோதனை மையத்தில் சேர்த்துள்ளனர் தனியார் ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 17 பேரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் பள்ளி படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க: மகளிர் தொகை இல்லாதவர்களின் கவனத்திற்கு… இன்று முதல் உங்களுக்கும் கிடைக்கு வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதிங்க..!