கவிதை களுக்கு ஓய்வு கொடுத்து மண்ணில் சென்ற காசி கே.வி.கிருஷ்ணன்..!
பாரதியாரின் கவிதை என்றால் அதை நேசிகாதவர்கள் யாரும் இருக்க முடியாது உணர்ச்சி பூர்வமாக அவர் எழுதும் கவிதைகள்.., பெண்களை பற்றி அவர் எழுதிய கவிதைகள் பலரையும் உணர்ச்சி வசபடுத்தும்.
தமிழில் இருக்கும் பாரதியாரின் கவிதைகளை ஹிந்தியில் எழுதி பாரதியரை தேசிய கவிஞராக உயர்த்தியவர் பாரதியாரின் மருமகன் “காசி கே.வி.கிருஷ்ணன்” 97 வயதில் காலமானார்.
சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த பாரதியை, காசியில் இருக்கும் அவரின் அத்தை குப்பமால் வீட்டில் வளர தொடங்கினார். 16 வயதில் இருந்தே மகாகவி பாரதி கல்வி, கலை, கலாசாரம், மற்றும் பொது அறிவு போன்ற விஷயங்களை கற்றார். ஆனால் 39 வயது வரை மட்டுமே இவர் உயிர் வாழ்ந்தார்.
காசியில் உள்ள சிவமடம் என்று எழுதப் பட்டிருந்த வீட்டில் தான் பாரதி வசித்து வந்துள்ளார். அப்பொழுது தான் பாரதியாரின் அத்தை மகன் கிருஷ்ணன் பிறந்தார்.
கிருஷ்ணன் பிறந்த பொழுது பாரதியார் அவருடன் இல்லை.., கிருஷ்ணனிற்கு கருத்து தெரிந்த பின் பாரதியார் உயிருடனே இல்லை. கிருஷ்ணனிற்கு விவரம் தெரிந்த பின் பாரதியார் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டுள்ளார்.

பாரதியாரின் வீரமும், அவரின் குணமும் கேட்டறிந்த கிருஷ்ணன் பாரதியை பற்றி மற்றவர்களிடம் புகழ்ந்து பேச ஆரமிதுள்ளார். பின் பாரதியாரின் கவிதைகளை படித்த காசி, தமிழில் இருக்கும் பாரதியின் கவிதையை ஹிந்தியில் எழுத தொடங்கினார்.
பின் அதை காசி முழுவதும் விற்பனை செய்ய ஆரமித்தார்.., பாரதியாரின் கவிதைகளை படித்து அதை ஹிந்தியில் எழுதி விற்பனை செய்த கிருஷ்ணன் நாளடைவில் அவரே ஹிந்தியில் கவிதை எழுத ஆரமிதுள்ளார்.
படிப்பில் ஆர்வம் கொண்ட காசி குடும்ப வறுமையால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். இருந்தும் கவிதை மீது இருந்த ஆர்வத்தால் அவரை சுற்றி இருந்த பகுதி மாணவர்களுக்கு கவிதை எழுத சொல்லி கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவருக்கும் அவர் மனைவிக்கும் உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது 1979 ம் ஆண்டு கிருஷ்ணனின் மனைவி லக்ஷ்மி காலமானார்.., நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் அவதி பட்ட காசி கிருஷ்ணன் சில நாட்களுக்கு முன் காலமானார்..
அவரின் உடலுக்கு பல தலைவர்களும் மரியாதை செலுத்தினர். காசி கிருஷ்ணனின் உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குஜராத்தில் இன்று கல்லூரி மாணவர்கள் அவரின் கவிதை புத்தகங்களை இலவசாமாக வழங்கியுள்ளனர்.

















