தொண்டை புண் பிரச்சனையை சரி செய்ய ஒரு ரகசியம்..!!
தண்ணீர் மாற்றி குடித்தால் சிலருக்கு தொண்டை கட்டிக் கொள்ளும்.., ஒரு சிலருக்கு அதிக சூடான பொருட்களை சாப்பிட்டால் தொண்டை புண் ஏற்படும் .., அவற்றை சரி செய்வதறகான சில இயற்கை மருத்துவத்தை பற்றி பார்க்கலாம்..
வெற்றிலை பாக்கு : தொண்டை புண் உள்ளவர்கள் மட்டுமல்ல, அஜீரணம் கோளாறு, செரிமானம் கோளாறு உள்ளவர்களும் சாப்பிட்ட பின் வெற்றிலை பாக்கு எடுத்துக்கொண்டால் குணமாகிவிடும். எனவே தான் இன்னும் திருமணம் வீட்டில் வெற்றிலை பாக்கு வைப்பது வழக்கமாக்க பட்டுள்ளது.
கடுக்காய் : கடுக்காயை கஷாயம் வைத்து.., அதில் வாய்கொப்பிளித்து வந்தால் தொண்டை புண் சரியாகிவிடும்.
திரிபலா : இரவில் திரிபலா பொடியை சூடு தண்ணீரில் கலந்து அரை டம்பளர் குடித்து வந்தால் விரைவில் சரியாகி விடும்.
மஞ்சள் : வெந்நீரில் மஞ்சள் சேர்த்து வாய் கொப்பிளித்து வந்தால்.., தொண்டைப்புண் சரியாவதோடு சளியும் முறிந்து போகும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.