பெர்பியூம் வாங்கும் பொழுது இதை செக் பண்ணி வாங்குங்க..!!
வாசனை திரவியம் என்று அழைக்கப்படும்.., பெர்பியூம் அதிக வசீகர தன்மை கொண்டது. இதை பலரும் பயன் படுத்துவதன் நோக்கம், உடலில் ஏற்படும் துர்நாற்றம் போக்குவதற்கும். அதில் இருந்து வரும் திரவிய வாசனையை வைத்து, மற்றவர்களை வசீகரிக்க செய்யவும் தான்.
ஆனால் அதை ஒரு சிலர் எந்த காலத்திற்கு எந்த பெர்பியூம் பயன் படுத்துவது என்று தெரியாமல் குழம்பி இருப்பார்கள். அவர்களுக்கான ஒரு சில பதில்கள் இதோ.
வெயில் காலத்தில் லேசான வாசனை தரக்கூடிய பெர்பியூமையும், குளிர் காலத்தில் அதிக வாசனை தரக்கூடிய பெர்பியூமையும் பயன் படுத்துவது சிறந்தது. அதில் இதில் ஒரு சிலவற்றை கவனிக்க மறுக்காதீர்கள்.
* கடைக்கு சென்று பெர்பியூம் வாங்கும் பொழுது.., டெஸ்டர் மட்டும் செக் செய்து வாங்கிவிடும் அல்லது வாங்க கூடிய பெர்பியூமை டெஸ்ட் செய்து வாங்கிவிடுவோம்.., ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. ஏசி காற்றில் பெர்பியூமை டெஸ்ட் செய்யும் பொழுது, அதன் வாசனை அங்கேயே தங்கி விடும்.
இதனால் நீண்ட நேரம்.., வாசனை இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது. ஏசி காற்று இல்லாத இடத்திற்கு சென்று பெர்பியூமை டெஸ்ட் செய்து வாங்கினால் அதன் உண்மையான வாசனை தன்மை தெரிந்து விடும்.
* கோடை காலத்தில் சில கலப்படம் மிக்க பெர்பியூம் களும் தாயர் செய்யப்படும், நீண்ட நேரம் பெர்பியூம் வாசனை மாறவில்லை என்றால் அது கலப்படம் மிக்கது.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..!!
-வெ.லோகேஸ்வரி