சித்திரா பௌர்ணமியில் செய்ய வேண்டிய வழிபாடுகள்..
சித்திரை மாதம் என்றாலே பல கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருவிழாக்கள் தொடங்கிவிடும்.
மாதம் தோறும் பௌர்ணமி வந்தாலும், சித்திரை மாதத்தில் வரும், சித்ரா பௌர்ணமிக்கு தான் விஷேசம்.
சித்ரா பௌர்ணமியில் சகல தெய்வங்களையும் வழிபாடு செய்யலாம்..
சிவபெருமானிற்கு உகுந்த நாளுகவும் திகழ்கிறது.
அதனால் தான் திருவண்ணாமலையில். சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் நடைபெறுகிறது.
அம்பிகைக்கும், நாராயணருக்கும் கூட மிகவும் விஷேசம் நிறைந்த நாள்..,
மதுரையில் அழகர் எழுந்தருள்வதும் இன்றைய நாளில் தான்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளிலும் இன்று
பக்தர்கள் காவடி, பால்குடம், வேல் அணிந்து நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.
சித்ரா பௌர்ணமி அன்று அனைத்து தெய்வங்களுக்கும் விஷேசமான நாள் என்பதால்.., கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
மேலும் விரதம் இருந்து விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்..
மேலும் இது போன்ற பல தெய்வீக தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள.., தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி

















