வத்தலகுண்டு அருகே மருதாநதி ஆற்றில், வரதராஜ பெருமாள் பச்சை பட்டுத்தி இறங்கினார். கோவிந்தா,கோவிந்தா சரண கோஷத்துடன், பக்தர்கள் வழிபாட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மருதாநதி ஆற்றில், வரதராஜ பெருமாள் ஆற்றில், இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு அழகர் வேடமிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர். பட்டிவீரன்பட்டி அய்யம்பாளையம், சித்தரவு, தேவரப்பன்பட்டி பகுதியில் உள்ள கிராம மக்கள், அதிகாலை முதலே மருதாநதி ஆற்றின் கரையில் காத்திருந்தனர்.
வரதராஜ பெருமாள் பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் ஆற்றில் இறங்கினார். அப்பொழுது சக்கரை குடம் வைத்து, வழிபாடு நடத்தினார்கள். காளை மாடு வழிபாடு மற்றும், அலங்காரம் நடைபெற்றது. சித்தரேவு கிராமத்தில் இருந்து, நெல்லூர் வழியாக வரதராஜ பெருமாள், மருதாநதியை அடைந்தார்.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, கோவிந்தா கோசத்துடன், சுவாமி தரிசனம் செய்தனர். பாரம்பரிய முறைப்படி ஆரஞ்சுமிட்டாய், கரும்பு சர்க்கரை குடம் வைத்தும், வழிபாடு செய்து பிராத்தனையை நிறைவேற்றினார்கள்.
நீர்மோர், பானக்கம், குளிர்பானங்கள், பக்தர்களுக்கு வழங்கினார்கள். வராராஜ பெருமாளை காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள், மருதாநதி ஆற்று பாலம் மற்றும், ஆற்றில் கூடியிருந்தனர். இதனால் இந்த பகுதியில் கூட்டம் நிரம்பிவழிந்தது. மருதாநதி பாலம் முழுவதும், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Discussion about this post