மணப்பெண்களின் கவனத்திற்கு ..!
திருமணத்தில் புதுமண தம்பதியர்களை வாழ்த்த வருபவர்கள் மனம் நிறைவுடன் செல்ல சாப்பாடு சிறப்பாக ஏற்பாடு செய்வார்கள். சாப்பிட்டு செல்லும் பொழுது மனம் மகிழும் வண்ணம் தாம்பூல பையில் எதாவது ஒரு பொருளை கொடுத்து அனுப்புவார்கள்.
இதை மட்டும் நாம் சரியாக செய்தால் போதுமா..? மற்றவர்களை கவரும் வண்ணம் மணமக்களின் உடையும் கவனிக்க பட வேண்டிய ஒன்று.
திருமணத்திற்கு வரும் அனைவரையும் கவரும் வண்ணம் உடைகள் இருக்க வேண்டும். அவர்களின் நிறத்திற்கு ஏற்றது போல, எடுக்க வேண்டும்.
மணப்பெண் வரவேற்பில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என மணப்பெண் லெகங்கா, உடுத்தினாலும். முகூர்தத்தில் பாரம்பரிய கூரைப் பட்டு தான் அனைவரும் விரும்புவார்கள்.

மணப்பெண் வரவேற்பில் அதிக மேக்கப் இல்லாமல், அவரவர் முகத்திற்கு ஏற்றது போல மேக்கப் செய்ய வேண்டும்.
மணப்பெண் வரவேற்பில் தங்க நகைகள் அணியாமல், விற்கும் நகைகள் ( Stone Jewel Sets ) , அணிந்தால் பார்பவர்களுக்கும், புகைப் படத்திலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
காலையில் முகூர்த்த நேரத்தில் கூரை பட்டு, உடுத்தும் பொழுது மட்டும் தங்க நகைகள் அல்லது விற்கும் நகையிலும் கூட மஹாலட்சுமி டாலர் நகைகள் அணிவது அழகாக இருக்கும்.
புடவைக்கு மேட்சான ஜாக்கெட் தைப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அதை மாடர்னாக தைப்பது.
கைகளில் வைக்கப்படும் மருதாணி இருகைகள் முழுவதும் வைக்கலாம்.
மணமகள் வரவேற்பில் கூந்தலை விரித்த படியோ அல்லது மாடர்னாகவோ வைக்கலாம். காலை முகூர்த்தத்தில் ஜடை பின்னி அதில் பூ சூடி வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
வெ.லோகேஸ்வரி