President Murmu asks 14 questions to the SC
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு மீது 14 கேள்விகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கோரியுள்ளார்.
தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட பரபரப்பான 14 கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இந்த தீர்ப்பு குறித்து தொடர்ந்து மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவும் தற்போது கேள்விகளை எழுப்பி உள்ளார். President Murmu asks 14 questions to the SC
தமிழ்நாடு அரசின் வழக்கின் தீர்ப்பு குறித்து மொத்தம் 14 கேள்விகளை எழுப்பி உள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, இதற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்.
அதில், அரசியல் சாசனத்திலேயே இல்லாத நிலையில் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு எப்படி காலக்கெடு நிர்ணயிக்க முடியும்?
உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் 146 ஐ மாநில அரசுகள், ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு பயன்படுத்த முயற்சிக்காதா?
என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி உள்ளார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
பொதுவாக ஜனாதிபதிகள் அரசியல் சாசன பிரிவு 143ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை, விளக்கம் பெறுவது என்பது அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது. இதற்கு முன்பு 1998 ல் இந்த அரசியல் சாசன பிரிவு பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு இப்போது தான் இந்த பிரிவை இப்போதைய ஜனாதிபதி திரெளபதி முர்மு பயன்படுத்தி உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பிஆர் கவாய்க்கு இது முதல் சவாலாகும். இதனால் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 14 கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்கின்றன உச்சநீதிமன்ற வட்டாரங்கள். President Murmu asks 14 questions to the SC