Monday, June 23, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் - சுந்தரேசுவரரை கரம் பிடித்தார் மீனாட்சி அம்மன்

by logeshwari
May 8, 2025

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

 

 

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் முதன்மையானது சித்திரை திருவிழா. இத்திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுனரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக கோயில் வடக்கு ஆடி வீதி மேற்கு ஆடி வீதி சந்திப்பில் 10 டன் வண்ணமிகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பிரமாண்ட திருக்கல்யாண மேடையில் திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகன் பெருமான் தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளியதை தொடர்ந்து அருள்மிகு மீனாட்சியும் சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்தில் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர்.

தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட திருமண சடங்குகள் நடத்தப்பட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமிக்கு பட்டுவஸ்திரம் சாத்தப் பட்டதை தொடர்ந்து சுந்தரேசுவரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணை சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்க திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனையடுத்து விழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக்கொண்டனர். திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் மணக்கோலத்தில் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுதும் பக்தர்களுக்கு காட்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக வடக்கு மேற்கு ஆடி வீதிகளில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு 300 டன் அளவில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது.

கோவில் உள்புறத்திலும், சித்திரை வீதிகளிலும் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு இருந்ததுடன் கோயில் மற்றும் சுற்று பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதனை முன்னிட்டு பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் 27 ஆவது ஆண்டாக திருக்கல்யாண விருந்து வழங்கி வரும் நிலையில் நாளை நடைபெறும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று இரவும், நாளையும் 1 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

மேலும், திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் ஆடி வீதிகள் சித்திரை மொய் காணிக்கை செலுத்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு இருந்ததுடன் ஒரு லட்சம் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்த சபை சார்பில் பிரம்மாண்டமான திருமண விருந்து மதுரை சேதுபதி பள்ளியில் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் நாளை காலை மாசி வீதிகளில் அம்மனும் சுவாமியும் வலம் வரும் திருத்தேரோட்டமும், சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் 12- தேதியும் நடைபெறுகிறது.

Maduraiசித்திரை திருவிழாவின் முக்கிய விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மாநகரம் முழுவதும் விழா கோலமாக காட்சி அளிக்கிறது..

Tags: #மீனாட்சி சுந்தரேசுவரர்MADURAI MEENAKSHI AMMANMeenakshi Sundareswarar Thirukalyanamமதுரை சித்திரை திருவிழாமீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

ஆன்மிகம்

ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் ஆலயத்தில் 5 நாள் மட்டுமே நிகழும் அதிசயம்…!!

Next Post

பாக். கதறல்: அலறிய லாகூர்!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.