நடிகர் பாரேஷ் ராவால் மூட்டு வலியில் இருந்து குணமடைய தினமும் காலையில் தனது சிறுநீரை குடித்து வந்ததாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக லல்லான்டாப் சேனேலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, எனக்கு மூ ட்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். என்னை பார்க்க அஜய் தேவ்கானின் தந்தை வீர் தேவ்கான் வந்தார். அப்போது, அவர்தான் என்னிடத்தில் தினமும் காலையில் உங்கள் சிறுநீரை குடிக்க வேண்டுமென்று கூறினார். அதோடு , மட்டன், புகையிலை , மது போன்றவற்றை தவிர்க்கவும் சொன்னார்.
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் எனது சிறுநீரை குடித்தேன். பீர் போல கருதி குடித்தேன். 15 நாட்கள் கழித்து டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது காயம் குணமாகி விட்டது. டாக்டர்களை இதை கண்டு ஆச்சரியப்பட்டனர். வழக்கமாக இது போன்ற காயங்கள் ஆற இரு மாதங்கள் பிடிக்கும் என்றும் மருத்துவர்கள் என்னிடத்தில் கூறினர்.
பாரேஷ் ராவாலின் இந்த கருத்து இணையத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் சிரியக் ஆபி பிலிப்ஸ் என்பவர் தன் எக்ஸ் பக்கத்தில்,’ பாலிவுட் நடிகர்கள் கூறுவது போல உங்கள் சிறுநீரையோ அல்லது மற்றவர்களின் சிறு நீரையோ குடிக்காதீர்கள். சிறுநீர் குடிப்பதால் உடலுக்கு எந்த பயனும் கிடையாது. மாறாக பாக்டீரியா போன்ற கிருமிகள்தான் உடலுக்குள் செல்லும். நமது உடல் வெளியேற்றும் உப்பு, கெமிக்கல் போன்றவைதான் சிறுநீரில் உள்ளன. இவற்றை குடிப்பத உடலுக்கு ஆபத்தானது. பாரேஷ் ராவல் வாட்சப் பூமர் அங்கிளுக்கு நல்ல எடுத்துக்காட்டு. மீடியாக்களுக்கும் தீனி போடுகிறார்’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

















