இயக்குநர் தங்கர் பச்சானின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை . இங்குதான் அவருடைய அண்ணன் செல்வராஜ் வசித்து வருகிறார். சொந்த ஊரில் அவர் விவசாய பணிகளை அவர் செய்து கொண்டுள்ளார். இவருடைய மகள் சரண்யா சமீபத்தில் நடைபெற்ற யூபிஎஸ்சி தேர்வு எழுதிடியருந்தார். இது நான்காவது முறையாக அவர் எழுதியிருந்தார். வெளியிடப்பட்ட முடிவில் சரண்யா அகி இந்திய அளவில் 125 வது இடம் பிடித்து ஐஏஎஸ் ஆகியுள்ளார் .
இதையடுத்து, தங்கப் பச்சான் வெளியிட்ட பதிவில் தனது சகோதரரின் பேத்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தங்கர் பச்சான் தனது பதிவில் எனது மூத்த அண்ணன் செல்வராசு அவர்களின் பேத்தி சரண்யா இந்திய அரசு பணி தேர்வில் இந்திய அளவில் 125வது இடத்தைப் பிடித்து ஐஏஎஸ் ஆகி இருக்கிறார்.
கடலூர் மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் தன்னை உருவாக்கிய இம்மண்ணுக்கும் இம்மக்களுக்கும் மிகச்சிறந்த சேவை ஆற்றிட வாழ்த்துகிறேன் என்று அவருடைய புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டி வருகிறார்கள்.