பயணம் சமயத்தில் உங்களுக்கும் இப்படி இருக்குமா..? அப்போ இதை படிங்க முதல..!!
ரயில் பயணம், பேருந்து பயணம், விமானம் உள்ளிட்ட பயணத்தின் போது வாந்தி, குமட்டல், தலைசுற்றல் போன்றவை சிலருக்கு ஏற்படும்.
இதுபோன்று வாந்தி எடுப்பதன் காரணமாக எலக்ட்ரோலைட்டுகளை விரைவாகக் குறைத்து, நீரிழப்புக்கு உட்படுத்தும், எனவே வாந்தி வருவதை தடுத்து, நம்மை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். இவற்றை இயற்கையான முறையிலும் குணப்படுத்தலாம்.
கிராம்பு :
கிராம்பு ஒரு சிறந்த மருத்துவ உணவாக உள்ளதால் இது குமட்டலையும் நிறுத்தும் திறன் இதற்கு அதிகம். எனவே பயணம் செய்யும்போது வரும் குமட்டலில் இருந்து சரியாக பச்சை கிராம்புகளை மென்று சாப்பிட வேண்டும்
சீரகம் :
இதேபோன்று செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் சீரகம் குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்கிறது. சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் வாந்தி வருவதை தடுக்கும்.
புதினா :
புதினா இலைகளை தொடர்ந்து பயணத்தின் போது மென்று சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, தலைசுற்றலை தடுக்கும்.
எலுமிச்சை :
வெளியூர் பயணத்தின் போது வாந்தி எடுப்பவர்கள் எலுமிச்சை பழத்தை கொண்டு செல்வ மறப்பதில்லை.
எலுமிச்சை சாறு சாப்பிடுவதன் மூலம் பயணத்தின் போது ஏற்படும் குமட்டல் அறிகுறிகளை தடுத்து நிறுத்தும்.
– சத்யா

















