“போஸ்டர் அடி அண்ணன் ரெடி..” வலிமையான அரசியலில் பெரும் பாதையை அமைப்போம்..!! தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை..!!
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது.. கட்சி தொடங்கி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் கட்சியின் கொடியும், கட்சியின் பூவும் வெளியிடப்பட்டது..
மேலே கீழே இரண்டு இளம் சிவப்பு நிறமும் நடுவே மஞ்சள் நிறமும் கொண்டுள்ளது.. அதில் மஞ்சள் நிறத்தில் அதில் இரண்டு பக்கம் யானையும் நடுவே வாகை பூவும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.. இந்த கொடியானது கடந்த மாதம் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்றப்பட்டது..
ஆனால் கொடி வெளியிடப்பட்ட பின் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது., அதாவது இக்கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானையானது பகுஜன் சமாஜ் கட்சியில் முன்னதாகவே இடம் பெற்றுவிட்டது எனவே அதனை நீக்க வேண்டும் என வலியுறுத்தி பசக சார்பில் கண்டனங்கள் எழுந்தது..
அதன் பின் ஆகஸ்ட் 23ம் தேதி கட்சியின் பாடலும் வெளியானது… “தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது.. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது.., அரசரை கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி.., தூர நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது., தோளில் வந்து கைய போடும் தலைவன் கொடி ஏறுது”
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் செப்டம்பர் 23ம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்தப்படும் என அக்கட்சியின் சார்பில் பலரும் தெரிவித்திருந்த நிலையில்., கட்சியின் மாநாட்டிற்காக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விக்கிரவாண்டி மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கோரியிருந்தார்., ஆனால் அதற்கு விழுப்புரம் காவல்துறை அதிகாரிகள் பல நிபந்தனைகளை முன் வைத்தனர். அந்த நிபந்தனைகளுக்கு தமிழக வெற்றிக் கழகமும் சம்மதம் தெரிவித்திருந்தது..
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியில் மாற்றம் ஏற்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது ” என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே”
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.
கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில். தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள். கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.
தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்…
“இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்..” இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக. தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.
விரைவில் சந்திப்போம்…!! வாகை சூடுவோம்..!!