வேலை முடிந்த திறக்க வேண்டும்..!! மந்திரி வரான் மச்சான் வரான் சொல்லக் கூடாது..!! அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!!
வேலூர் மாநகராட்சியில் சாலைகளை மாற்றிமாற்றி கொத்துகிறார்கள் இதனால் மக்கள் பாதிக்கபடுகின்றனர் உள்ளாட்சித்துறை அமைச்சர் நேருவிடம் பேசி தீர்வு காண்பேன் பாதாள சாக்கடை பணிகளும் இன்னும் முடிந்த பாடில்லை என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்..
வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் 1கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் 24 கடைகள் புதியதாக கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கடைகளை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,மேயர் சுஜாதா மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர் இவ்விழாவில் பயனாளிகளுக்கு கடனுதவிகளை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்…
இவ்விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் காங்கேய நல்லூரில் இருந்து சத்துவாச்சாரிக்கு மேம்பாலம் கட்ட நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது அடிக்கல் நாட்டினோம் ஆனால் அது 10 ஆண்டுகள் அது கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் அதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
விரைவில் பணிகள் நிறைவடையும் வீதி சாலைகள் பளிங்கு போல் இருக்க முயற்சிகள் செய்ய வேண்டும் காந்தி நகரில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள் துரைமுருகன் முதல்வர் பக்கத்தில் இருக்கிறார்.. பொதுசெயலாளராக இருக்கிறார். சட்டமன்ற தலைவர் அவர் தான் 50 ஆண்டுகாலம் அனுபவம் பெற்றவர் தொகுதியை கவணிக்கவில்லை எனலாம்.
நான் நேருவிடமும் சொன்னேன் தலைவரிடமும் சொன்னேன் காந்தி நகர் ஓட்டுகளை கொட்டும் இடம் இவர் இருக்கிற தொகுதி சாலைகள் இப்படி இருக்கிறது.. என எவனாவது சொன்னால் அது அசிங்கம் அதனாலே உடனடியாக தெருக்களில் செய்ய வேண்டிய பணிகளை செய்ய வேண்டும் காந்தி நகர் இரண்டு கழிவு நீர் கால்வாய்களையும் செப்பனிட நடவடிக்கைகளை செய்துள்ளேன் காந்தி நகரில் எங்கும் சாக்கடை ஓடும் நிலை இருக்காது.
இந்த தெருக்களை எல்லாம் ஸ்மார்ட் சாலை போடுவதாக கால்வாய் பணிக்கு தோண்டி மின் வாரிய கொத்தி இப்படியே கொத்தி கொத்தி சாலையில் நடப்பவன் விழுந்து தத்தி தத்தி போனான் இந்த நிலை தான் இருக்கிறது.. பெரிய பெரிய ஒப்பந்ததாரர்கள் தான் இதிலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் சரியாக பணியை செய்யவில்லை நான் சட்டசபையில் சென்றவுடன் எனக்கு எதிரில் தான் இருப்பார்.
அவர் இதுவரையில் பணியை செய்யவில்லை இன்னும் மக்கள் அவரை செய்ய விடமாட்டார்கள் மாநகராட்சி பணிகளில் சில நேரங்களில் அவசரப்பட்டு செய்கிறார்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி தண்ணீர் வருவதற்கு முன்பு திறந்தனர் தண்ணீர் வரவில்லை இதே போல் கழிஞ்சூரிலும் திறந்தனர் வேலையை முடித்து திறக்க வேண்டும் மந்திரி வரான் மச்சான் வரான் என சொல்லி திறக்க கூடாது செய்யும் பணியை சரியாக செய்ய வேண்டும் என பேசினார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..