அதி வேகத்தில் திமுக..! அதாள பாதாளத்தில் அதிமுக..!
கடந்த ஏப்ரல் மாதம் லோக்சபா தேர்தல் முடிந்ததை தொடர்ந்து., தற்போது சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்டது. அதாவது போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் ஒருங்கிணைப்பு குழு அமைத்து அவர்களுக்கான பணிகளை கொடுத்துள்ளது. என சொல்லப்படுகிறது..
ஆனால் அதிமுக அதற்கு நேர்மாறாக உள்ளதாம் இன்னும் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தற்கான காரணம் குறித்து பேசி வருவதால் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.. பெரும் எதிர்பார்ப்புகள் இடையே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி கட்சிகளோடு ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் அதே சமயம் தமிழகத்தில் அதே கூட்டணி கட்சிகள் கடும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக -திமுக இடையே எப்போதும் கடும் போட்டி இருந்து கொண்டே இருக்கும். ஆனால் பல தொகுதிகளில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் இரண்டாம் இடத்திற்கு வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என சொல்லலாம். ஆனால் தமிழக்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40க்கு 40 தொகுதிகளில் பெரும் வெற்றியை சந்தித்தது.. அந்த வெற்றி நிச்சயமாக தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு தலைமை வகித்த திமுக தலைமையை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் உழைத்தது போலவே சட்டமன்ற தேர்தலிலும் அது முன்னோட்டமாக கருதப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். அதற்கான தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்டது என சொல்லலாம்.., அதற்காக ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து களப்பணியாற்ற திமுக உத்தரவிட்டுள்ளது..
அந்த அமைப்பில் மூத்த அமைச்சர்கள் முதல் உறுப்பினர்கள் வரை அதில் இடம் பெற்றுள்ளனர்.. அவர்கள் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்பாகவும் கட்சி தலைவர்கள் பரிந்துரை செய்யப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகளை கடந்த மாதமே அந்த குழு தொடங்கிவிட்டது.. சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கியுள்ளது பிற கட்சிகளைடையே தற்போது பயத்தை ஏற்படுத்தியிருப்பதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டறியாமல் அதிருப்தியை ஏற்படுத்திய வேட்பாளர்களுக்கு இந்த முறை வாய்ப்புகள் மறுக்கப்படும் எனவும் அவர்கள் யார் யார் என்பது பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என திமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தற்போது மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதனால் 2025ம் ஆண்டு தொடக்கத்திலேயே சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் வருகின்ற 2026ம் ஆண்டிற்கான தேர்தல் பணிகளை திமுக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே தொடங்கி விடும் என சொல்லப்படுகிறது.. திமுக கட்சியின் மூத்த தலைவர்கள். ஒருபக்கம் முழு வீச்சில் வேலைபார்த்து கொண்டு இருக்க மறுபக்கம் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகாளான அதிமுக தொண்டர்கள் சற்று அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் பேசிய போது, பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று அனைத்து தேர்தல்களிலும் படும் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் வருகின்ற தேர்தலில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு கூட்டணி வைத்துக்கொள்ள முற்சித்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என எடப்பாடி எச்சரித்து இருப்பதால் கூட்டணி வைத்துக்கொள்வது கடினம் மட்டுமின்றி 2026 தேர்தலும் பெரிய ஏமாற்றத்தை அளிக்கும். எனவே தற்போதைய மாவட்ட அளவிலான நிர்வாகிகளை சந்தித்து சட்டமன்ற தேர்தலுக்கான பணியை முன்னெடுக்க வேண்டும்” என்றனர்.

















