தனியாக வரும் ஆண்களை குறிவைக்கும் நபர்கள்.. போலீசில் சிக்கியது எப்படி..!
திருவண்ணமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராமன்(28) என்பவர் சென்னை, வில்லிவாக்கத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் சம்பவ தினத்தன்று விடுமுறை என்பதால் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
பேருந்துகாக காத்திருந்த அவர் அருகில் இருந்த மதுபான கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார். பின்னர் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து நின்று கொண்டிருந்தபோது பெண் ஒருவர் அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்துள்ளார்.
அவரும் பதிலுக்கு பேசும் போது திடீரென வந்த இரண்டு பேர் என் மனைவியிடம் நீ எதற்கு பேசுகிறாய்? என கேட்டு பிளேடால் அவரது முகத்தில் கீரியுள்ளனர். அதோடு நிறுத்தி கொள்ளாத அவர்கள் சிவராமனிடம் இருந்த ரூ.3500 மற்றும் செல்போனையும் பறித்து சென்றனர்.
இதனைதொடர்ந்து சிவராமன் தனக்கு நேர்ந்ததை குறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்க்கொண்டனர்.
விசாரணையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி உள்ள மகாலட்சுமி, சந்தியா, ராஜேஷ் மற்றும் சேட்டா என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மேலும் நடத்திய விசாரணையில் இவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு தனியாக வரும் ஆண்களை குறிவைத்து அவர்களிடம் பேச்சி கொடுப்பதும் பின்னர் வரும் ஒருவர் தான் அந்த பெண்ணின் கணவர் என் மனைவியிடம் ஏன் பேசுகிறாய்..? என்று நாடகத்தை அரங்கேற்றி திருட்டில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது.
பின்னர் சந்தியா மற்றும் சேட்டாவை கைது செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள ராஜேஷ் மற்றும் மகாலட்சுமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்