ஆடி செவ்வாய் வாராஹி அம்மன் வழிபாடு..! பிரச்சனைகள் தீர இதை செய்ய மறக்காதீங்க..!!
ஆடி மாதம் என்றாலே மிகவும் விஷேஷமான மாதம்.., ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு மிகவும் விஷேஷமான நாள்.. என்று சொல்லப்படுகிறது.
அப்படியாக இன்றைய நாளில் வாராஹி அம்மனுக்கு மிகவும் விஷேஷமான நாள்..
ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் வாராஹி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறும்.
வாராஹி பக்தர்கள் ஆடி செய்வ்வாய்கிழமை அன்று வாராஹி அம்மனுக்கு மஞ்சள் வாங்கி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்…
அப்படி மஞ்சள் வாங்கி கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றிப் பார்க்கலாம்..
நாம் வாங்கி கொடுக்கும் மஞ்சலில் அம்மனுக்கு அபிஷேகத்திற்கு பயன் படுத்துவார்கள்.., அப்படி செய்வதானால் தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
* அதிலும் வாராஹி அம்மனுக்கு செய்யப்படும் மஞ்சள் அபிஷேகத்தை பார்த்தால்.. கெட்டது விலகி விடும்..
* மஞ்சள் கிழங்கை மாலையாக கட்டி அம்மனுக்கு செலுத்தினால்.. தீராத நோய்கள் தீர்ந்து விடும் என ஆன்மீக வரலாறு சொல்லுகிறது.