சார்ஜ் எடுத்த ஸ்டாலின்..! சிக்கலில் பாஜக..! டெல்லிக்கு வந்த அந்த மெசேஜ்..?
17வது மக்களவையில் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகராக இருந்தார். ஆனால் துணை சபாநாயகர் அலுவலகம் காலியாக இருந்தது. இந்நிலையில் இந்திய கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்றது. சபாநாயகர் தேர்தலில் சில கட்சிகள் கிராஸ் வாக்குகள் செய்ததாக சில தகவல்கள் வெளியானது.
அதாவது சிவசேனா, ஐக்கிய ஜனதா தளத்திலேயே சிலர் கிராஸ் வாக்குகள் செய்ய போவதாக கூறி அதை மனதில் வைத்தே சபாநாயகர் பதவியை பெற இந்தியா கூட்டணி செயல்படுவதாகவும். ஒருவேளை இந்தியா கூட்டணி சபாநாயகர் பதவியில் வெற்றி பெற்றால் அது பாஜகவிற்கு மிக பெரிய அடியாக இருக்கும் என பாஜக தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் தான் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இரண்டு பேருமே “சபாநாயகர்” பதவியை தங்களுக்கான “இன்சூரன்ஸ்” ஆக பார்க்கிறார்கள் என அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமார் யாதவ் இருவரும் பாஜக கூட்டணியில் தற்போது நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவியை பெறுவதற்கு மிக தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். அந்த வகையில் ஆந்திர மாநில பாஜக தலைவரும், ராஜமந்திரி எம்.பி.யுமான “டக்குபதி புரந்தேஸ்வரி” 18வது மக்களவை சபாநாயகர் பதவிக்காக போட்டியிட போவதாக பாஜக தெரிவித்துள்ளது.
இவரை சபாநாயகராக்க வேண்டும் என்ற முயற்சியில் பாஜக காய் நகர்த்தி வருவதாகவும். அவரை சபாநாயக்கர் ஆக்க வேண்டும் என்ற முயற்சியில் டெல்லி பாஜக ஆய்வு செய்து வருவதாகவும் பாஜக தெரிவித்துள்ளது. மேலும் இதனை கண்காணிக்கும் பணிகளை அமித் ஷா கையில் எடுத்துள்ளார்.
மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் 18வது மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்த திட்டமிடுவதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது. 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி நிறைவடையும். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரில், சபாநாயகர் தேர்தலுக்கான பணிகள் வருகின்ற ஜூன் 26ம் தேதி நடைபெறும்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு வார்த்தை :
இப்படிப்பட்ட சூழலில் தான் சபாநாயகர் தேர்தல் தொடர்பான சில முக்கிய விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச வாய்ப்பு உள்ளதாக இந்திய கூட்டணி கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் முதல்வர் ஸ்டாலின் சபாநாயகர் பதவி தொடர்பாக பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி லோக்சபா சபாநாயகர் பதவியை பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) கட்சிகளான ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு (டிடிபி) ஒதுக்க வேண்டும் என்று.., இந்திய அணி வலியுறுத்த முடிவு செய்துள்ளதாம்.
அதற்காக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் இந்திய கூட்டணி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். சந்திரபாபு நாயுடுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் மிக நெருக்கமாக இருப்பதால் அதற்கான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ