அமலாபாலுக்கு பிறந்த குழந்தை..! குழந்தையின் பெயர்..?
அமலா பால்:
சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால். அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் அடுத்தாக வெளிவந்த மைனா திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.
அவரது எதார்த்தமான நடிப்பு திறனால் ரசிகர்களை கொஞ்ச கொஞ்சமாக தன் வசம் கொண்டு வந்தார். விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்த அமலாபால் தயாரிப்பிலும் களமிறங்கி வந்தார்.
திருமண வாழ்க்கை:
இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், சில வருடங்களிலேயே அவரிடம் ஏற்ப்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் ஜெகத் தேசாய் என்பவரை மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், தன்னுடைய கர்ப்பத்தை கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.
தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வளைத்தல பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிடுள்ளார்.
சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால்:
சமூக வளைத்தலத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அவ்வப்போது தனது புகைப்படம், வயிற்றில் உள்ள குழந்தையுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
தற்போது தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் மற்றும் குழந்தையின் பெயரையும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குழந்தை பிறந்துள்ளது:
அதன்படி அந்த வீடியோவில் கடந்த 11ம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தற்போது குழந்தையுடன் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் வீடியோவில் கூறியுள்ளார்.
மேலும் தனது குழந்தைக்கு இலை என்று பெயர் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அமலாபாலுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்