நமக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி..!! குட்டி ஸ்டோரி-2
ராமு என்கிற ஒரு ஏழை, அவர் வீட்ல ரொம்ப வறுமையா இருந்துச்சு. சரி என்னடா பண்றது நம்ம நகைய வச்சி தான் இனி பொழைக்கணும் போல நினைச்ச ராமு, நகையை அடகு வெக்க பேங்குக்கு போறாரு.
பேங்குல இருக்குற ஆபிசர் கிட்ட நகையை குடுத்துட்டு காசும் வாங்கிடுறாங்க. அப்புறம் அந்த நோட்ட எண்ணி பாத்த ராமு, சார் நோட்டு கொஞ்சம் கொறையுற மாதிரி இருக்கு கொஞ்சம் பாத்துச் சொல்லுங்க சார் அப்படினு சொல்லுறாரு.
அதுக்கு அந்த ஆபிசர் அதுல கரைட்ட தான் இருக்கு, எனக்கு வேற வேலை இல்லையா உனக்கு காசு எண்ணிதரர்து தான் என் வேலையா அப்படினு கேட்குறாரு.
பக்கத்துல இருந்த ஒரு குட்டி பொண்ணு, அந்த காசை வாங்கி எண்ணி.. சார் ஒரு நோட்டு அதிகமா இருக்கு சொல்லுறா, உடனே அந்த ஆஃபீசர் அந்த காசை வாங்கி எண்ணுறாரு இல்லையே நான் குடுத்த காசை விட கம்மியாத்தானே இருக்குனு சொல்லுறாரு. அப்புறம் அவரே அந்த காசு கம்மியா இருக்குறத உணருறாரு.
இதுல இருந்து என்ன புரியுதுனா நமக்குன்னு சொன்னா செய்ய மாட்டாங்க அதுவே அவங்களுக்கு சொன்னா உடனே செஞ்சுடுவாங்க..,