தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு 90,00,00,00,000 பணம் இப்படி தான் வந்துச்சா..?
டாக்சி டிரைவர் ராஜ்குமார் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.9000 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக ஒரு குறுஞ்செய்தி சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராஜ்குமார் என்ற நபர் பிழைப்புகாக சென்னையில வாடகை கார் ஓட்டி வருகிறார்.
இவர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளார். அதாவது செப்டம்பர் 9ம் தேதி மாலை 3 மணிக்கு ராஜ்குமாரின் செல்போனுக்கு 9000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக மெசஜ் வந்துள்ளது அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் 9,000 கோடியா என அறிவதே அவருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.
நம்ம அக்கவுண்டில் வெறும் 15ரூபாய் தான இருக்கும்.., அப்புறம் எப்படி கோடி என யோசித்த ராஜ்குமார். யாரோ நம்மை ஏமாற்றுகிறார்கள் என நினைத்து இது ஒரு மோசடி மெசேஜ் என நினைத்துள்ளார்.
அதன்பின் போன் ஆப்பில் செக் செய்தபோது வங்கி கணக்கில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். அட இது உண்மை தான் என நினைத்து தனது நண்பனின் வங்கி கணக்கிற்கு 21,000 ரூபாயை அனுப்பியுள்ளார்.
இந்த பணப்பரிவர்த்தனை நடந்த சில நொடிகளையே வங்கியானது மீதமுள்ள பணம் அனைத்தையும் திரும்ப பெற்றுள்ளது.
இதனையடுத்து தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமையை அலுவலத்தில் இருந்து ராஜ்குமாருக்கு போன் செய்துள்ளனர். தவறுதலாக ரூ.9000 கோடியை உங்க அக்கவுண்டில் டெபாசிட் செய்துவிட்டோம். நீங்க ஷேர் செய்த பணத்தை செலவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர்.
மேலும் சென்னையில் உள்ள கிளை அலுவலகத்திற்கு அவரை நேரில் வருமாறு அழைத்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகை என் அக்கவுண்டுக்கு வந்துள்ளது. அதனால் பிரச்னை எதாவது நேர்ந்துவிடுமோ என நினைத்து காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
மேலும் இதனை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்து டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தை செய்தனர்.
இதனை தொடர்ந்து 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து அனுப்பிய 21,000 ரூபாய் பணத்தையும் திருப்பிக் செலுத்த வேண்டும் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் தருகிறோம் எனவும் வங்கி தரப்பிலிருந்து ராஜ்குமாரிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..