கனடா நாட்டுடனான உறவில் விரிசல்..!! இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன..?
கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விசா வழங்கும் சேவையை நிறுத்திய இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கனடாவில் சுர்ரே பகுதியை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். கனடாவின் குடிமகன் அந்தஸ்து பெற்றவரான அவர், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனால், இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் தூதர்களை வெளியேறும்படி உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், கனடாவின் வின்னிபக் என்ற பகுதியில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி இன்று சுட்டு கொல்லப்பட்டார்.
சுக்தூல் சிங் என்ற அந்த காலிஸ்தான் பயங்கரவாதி 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார். அவர், 2017-ம் ஆண்டு கனடாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இவர், அர்ஷ்தீப் தல்லா என்பவரின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வந்துள்ளார்.
கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தி உள்ளது. இதன்படி, அடுத்த உத்தரவு வரும்வரை இந்த சேவை நிறுத்தப்படுகிறது. இதுபற்றி மாலை 4 மணிக்கு வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளிக்க உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..