ரத்து செய்யப்பட்ட 9 விமானங்கள்..!! பைலட் சொன்ன காரணம்..!! அதிருப்தியில் பயணிகள்…!!
சென்னை விமான நிலையத்தில் 9 முக்கிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.. அதை பற்றி விரிவாக இங்கே படிக்கலாம்..
நேற்று காலை 9.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டி இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 6.10 மணிக்கு புறப்பட இருந்த கவுகாத்தி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 9.10 மணிக்கு டெல்லி புறப்பட இருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், மற்றும் இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 4 எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது..
அதேபோல், புனேவில் இருந்து நள்ளிரவு 1மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வர இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 9 மணி மற்றும் மாலை 5:35 மணிக்கு வர இருந்த பெங்களூரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மற்றும் இரவு 8.20 மணிக்கு டெல்லி விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், மற்றும் இரவு 10.05 மணிக்கு கொல்கத்தா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 5 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது..
விமான நிலையத்தில் பரபரப்பு :
முன்னறிவிப்பு இன்றி விமானங்கள் ரத்து செய்யபட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.. இதுக் குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் கேட்ட போது நிர்வாக காரணங்களால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்..
மேலும் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தையும் வேதனையும் கொடுத்துள்ளதும்.. 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..