சிறிய புனல் மின்திட்ட கொள்கைக்கு அனுமதி..!! உறுதியான அரசாணை..!!
ஆறு, கால்வாய், மற்றும் ஏரியில் வரும் தண்ணீரை கொண்டு உள்ளூரில் சிறிய அளவிலான மின்உற்பத்தியை செயல்படுத்தும் வகையில் சிறுபுனல் மின்திட்ட கொள்கையை செயல் படுத்துவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டத்தை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
இந்த திட்டம் குறித்து எரிசக்தித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.., அதில் அவர் கூறியிருப்பதாவது. “எரிசக்தி வளங்களை புதுப்பித்து அதனை அதிரிக்கும் நோக்கில் தமிழக அரசு, 100 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரை உள்ள மின் நிலையங்கள் மற்றும் திறன் கொண்ட சிறு புனல் மின் திட்டங்களை அமைத்துள்ளது.
உள்ளூரில் மின் உற்பத்தி குறைவாக இருப்பதால் அதனை அதிகரிப்பதற்கான வாய்ப்பாகவும், கிராமங்களில் தேவைப்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்யவும் இந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.. கொள்கை 2024 ஆனது தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டம் (SHP), தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையதிற்கு மின்சாரம் புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 உட்பட புதிய கொள்கைகளுக்கான ஒப்புதல்களை அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள், நிலையான மின் உற்பத்தி, மின் கட்டமைப்பு திறனை சமன்படுத்த பயன்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை உருவாக்க முடியும். சிறு புனல் திட்டங்களால் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும். இதன்மூலம் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில் 10% தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு இலவசமாக வழங்கப்படும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..