சேவல் சண்டை நடத்திய 8 பேர் கைது..!! உடனே ஜாமீனில் எடுத்த போலீஸ்..!! பின்னணியில் வெளிவந்த பகீர் பதிவுகள்..!!
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சேவல் சண்டையை மீண்டும் அனேரி பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்ற சேவல் சண்டை. வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ எட்டு பேரை கைது செய்து சொந்த ஜாமினில் விட்ட போலீசார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனேரி சிவன் கோவில் பின்புறம் கடந்த 17ஆம் தேதி சில லட்சங்கள் புரளும் கோழி சண்டை நடைபெற்றது இந்த கோழி சண்டை சூதாட்டத்திற்கு சென்னை, பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோழிகளை சண்டை விட்டு ஆதாயம் பெற்று வருகின்றனர். மேலும் கோழி சண்டையின் மூலம் சுமார் சில லட்ச ரூபாய் வரை இந்த கோழி சண்டை நடைபெற்று இந்த நிலையில் சேவல் சண்டையில் கலந்து கொண்ட சிலர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளார் அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களை வேகமாக பரவியது.
இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் அனேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் பூர்ணா, விக்னேஷ், ஜெகதீசன், யாகு, முத்தமிழ், நதிம், முகசீ உள்ளிட்ட எட்டு பேரை திருப்பத்தூர் கிராமிய போலீசார் கைது செய்தனர்.
கைது செய்த பின்பு கிராமிய போலீசார் சொந்த ஜாமினில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் ஜாமீனில் எடுத்து விடுதலை செய்ய என்ன காரணம் என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு முறையும் புகார் அளித்த பின் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கிறது என்றும் மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..