“இடைத்தரகர் போல காசு வாங்க பிச்சை எடுக்காதீர்கள்..” அதிமுகவை விளாசியா அமைச்சர் துரைமுருகன்..!!
கலைஞர் கணவு இல்லத்திற்கு யாரிடமும் இடைத்தரகர் போல் காசு வாங்க பிச்சை எடுக்காதீர்கள் அமைச்சர் துரைமுருகன் பேச்சு – கீழ் பவானி அணை சீரமைக்க விவசாயிகள் தடுக்கிறார்கள் இருப்பினும் 900 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி…
வேலூர்மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் கணவு இல்லம் திட்டம் மூலம் வீடில்லா 300 நபர்களுக்கு வீடு கட்டி தருவதற்கான ஆணை வழங்கும் விழாவானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மண்டல குழு தலைவர் புஷ்பலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று 300 பேருக்கு கலைஞர் கணவு இல்லம் திட்டம் வீடு கட்டும் ஆணையையும்,41 கிராமங்களை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் வழங்கினார்.
பின்னர் இவ்விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் வீடு கட்ட அரசின் சார்பில் ரூ.3.50 லட்சம் உங்களுக்கு வழங்கப்படும் அதனை சிலர் நான் உனக்கு அரசின் வீடு கட்ட ஆணை வாங்கி தருகிறேன் அதற்காக ரூ.25 ஆயிரம் கொடு ரூ.50,ஆயிரம் ரூ.10 ஆயிரம் கொடுங்கள் என கேட்பார்கள் எந்த கொம்புனுக்கும் ஒரு பைசா கூட தர வேண்டாம் அவ்வாறு யாராவது உங்களை கேட்டால் மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது என்னை தொலை பேசியில் தொடர்பு கொண்டோ புகார் கூறுங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம் பெரிய மனிதன் என சொல்லி கொண்டு பிச்சை எடுக்காதீர்கள் இதெல்லாம் வேணாம் என பேசினார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் அத்திகடவு அவிநாசி திட்டம் 90 சதவிகிதம் அதிமுகவால் செய்து முடிக்கப்பட்டது.. என எடப்பாடி பழனிசாமி கூறுவது அவர் லேபிள் ஓட்டுவதிலேயே இருக்கிறார். அது குறித்து கருத்து சொல்ல நான் விரும்ப வில்லை கலைஞர் 100 ஆண்டு நாணயம் வெளியிட்டதை எதிர்க்கட்சி தலைவர் விமர்சிப்பது என்பது அவர் விவரம் இல்லாமல் பேசுகிறார்.
இதே போல் தான் அண்ணாவுக்கும் எம்,ஜி.,ஆருக்கு நாணயம் வெளியிட்டனர் ஆனால் எடப்பாடி குறை சொல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை இதில் அரசியல் கலக்க தேவையில்லை என கூறுவது உண்மை தான் மறைந்த தலைவருக்கு மரியாதை மாற்று கட்சியினர் உட்பட வந்து பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் மறைந்துவிட்ட தலைவர்களை பேசுவதில்லை ஆனால் சிலர் தான் தாறுமாறாக பேசுகின்றனர்.
இதில் காழ்ப்புணர்ச்சியை காட்ட கூடாது கீழ் பவானி அணை கால்வாய் சீர் செய்ய 900 கோடியை ஒதுக்கியுள்ளோம் 2 ஆண்டுகளாக பணி செய்ய முடியவில்லை இரண்டாண்டுகளாக விவசாயிகள் தான் தடுக்கிறார்கள் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி பணிகள் செய்கிறோம் அங்குள்ள பழமையான மரங்களை எடுத்துவிட்டு கரை அமைக்க வேண்டும் என்கின்றனர்.
கலைஞர் நாணயம் வெளியிட்டிற்கு ராகுல் காந்திக்கு அழைப்புள்ளதா என நீங்கள் அரசாங்கத்தை தான் கேட்க வேண்டும். தென் பென்னை பாலாறு இணைப்பு என்னுடைய லட்சியம் தமிழக ஆளுநர் சமஸ்கிருதம் சக்தி வாய்ந்த மொழி என கூறுகிறார்.. என கேட்டதற்கு அது செத்து போன மொழி என கூறினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..