திருப்பதியில் ஒரே நாளில் 5.05 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 1 ஆம் தேதி வரையிலான இலவச தரிசன டோக்கன்கள் நிறைவுபெற்றதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் முதல் வரும் ஜனவரி 1 ஆம் தேதி வரை சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, 4.25 லட்சம் டோக்கன்கள் வழங்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து திருப்பதியில் 9 இடங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைத்து கடந்த 21ம் தேதி நள்ளிரவு முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 1 ஆம் தேதி வரையிலான அனைத்து டோக்கன்களும் இன்று அதிகாலை 4.30 மணி வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் கவுன்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது.
இனி இலவச டோக்கன்கள் வழங்கப்படாது எனவும், டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வைகுண்ட துவாதசியான நேற்று காலை முதல் இரவு வரை 63 ஆயிரத்து 519 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் பக்தர்கள் 5.05 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தியதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.