கடலூர் மாரியம்மன் கோவிலில் 60ம் ஆண்டு திருவிழா..!!
கோவை மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள கடலூர் மாரியம்மன் கோவிலில் 60ம் ஆண்டு கோவில் உற்சவத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடங்கிய நாளில் இருந்தும் தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி நேற்று மாலை அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம் மற்றும் முளைப்பாரி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவிழா நாளையுடன் நிறைவு பெற இருப்பதால் இன்று அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் காட்சிக் கொடுத்தார். மேலும் நாளை பூ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் அம்மன் காட்சி கொடுக்க உள்ளதாகவும் விழா குழுவினர் தெரிவித்தனர்.
-வெ.லோகேஸ்வரி

















