கனடா நாட்டை சேர்ந்த மேயர் ஒருவர் தெருவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் உள்ள மார்கம் என்ற நகரில் ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டியுள்ளதாக அந்நகரின் மேயர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘என் வாழ்க்கையில் இதனை நான் கற்பனை கூட செய்ததில்லை. இதற்காக மார்கம் மேயர்ம் கனடாவின் இந்திய தூதர் மற்றும் கனடா நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எப்பொழுதும் நன்றிவுள்ளனவாக இருப்பேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் எனது பெயர் இல்லை. இரக்கம் என்பது தான் அதன் பொருள். நம் எல்லோருக்கும் பொதுவான கடவுளின் குணம். இந்தப் பெயர் கனடா மக்களுக்கு அமைதி,வளம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கும் என தெரிவித்து இருந்தார்.
100 ஆண்டுகள் இந்திய சினிமாவைக் கொண்டாடுகின்ற எனக்கு உத்வேகம் அளிக்கின்ற என்னுடன் பணிபுரிந்த கலைஞர்களுக்கு நன்றி, நான் கடலில் சிறிய துளி போன்றவன்.
‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று தெரிவித்துள்ளார்.