ADVERTISEMENT
“மின்சாரம் தாக்கி பரிதாபமாக ஒருவர் பலி-தூத்துக்குடி”
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த முருகன் என்பவர் கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.