அரியலூரில் ஒரே வீட்டில் 4 பேர்..!! பரபரப்பான அரியலூர்..!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு அருகே உள்ள வளவனேரி கிராமத்தை சேர்ந்த ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மனைவி பானுமதி மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பிரசாத் மற்றும் 2 வயது இரட்டை குழந்தைகளான சாத்விக், சாத்விகா, ஆகியோர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வீடு பூட்டியநிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகித்த மக்கள் இதுகுறித்து மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் அங்கு வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது மூன்று குழந்தைகள் தரையிலும் தாய் பானுமதி தூக்கிலும் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
பின்னர் பானுமதி, சாத்விக், சாத்விகா, மற்றும் பிரசாத் ஆகிய நான்கு பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தற்கொலையா..? அல்லது கொலையா.. ? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து பானுமதியின் கணவர் ராஜாவிற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரியலூர் பரப்பரப்பனாது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..