திருப்பதி உண்டியலில் நேற்று ஒரே நாளில் 4.37 கோடி வசூல்..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகெங்கும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.., தற்போது வார விடுமுறை என்பதால் திருப்பதியில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். தினமும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் கின்றனர்.
தற்போது ஆயிரம் பக்தர்களின் கூட்டம் பல் ,மடங்காக அதிகரித்துள்ளது. 69,733 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 15 மணி நேரம் காத்திருப்புக்கு பின்னரே 31 காத்திருப்பு அறைகள் திறக்கப்பட்ட பின்னரே சாமி தரிசனம் செய்துள்ளனர்.
தர்ம தரிசனத்திற்கு 15 மணி நேரமும் 300 ரூபாய் டிக்கெட்டில் 3 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் திருப்பதி கோவில் உண்டியலில் 4.37 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது, என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதி திருப்பதி தேவஸ்தானம் அருகில் உள்ள குளம் சுத்திகரிக்கப்பட்டதால் பக்தர்களுக்கு தரிசனத்திற்கும், குளத்தில் இறங்கவும் அனுமதிக்கவில்லை தற்போது மீண்டும் அனுமதிக்கப் படுவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
Discussion about this post