கஞ்சா கடத்தில் ஈடுப்பட்ட 3 வடமாநிலத்தவர்கள்..! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!
வாணியம்பாடியில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது.. ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை..
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் விசாகப்பட்டிணத்திலிருந்து விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, இந்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வாணியம்பாடியில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்பொழுது வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை தனிப்படை காவல்துறையினர் பிடித்து வாணியம்பாடி நகர காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், வெள்ளநாயக்கனேரி பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் பழையவூர் பகுதியை சேர்ந்த விஷால் என்பதும் இவர்கள், நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வருவதும், அதற்காக ஓடிசா மாநிலத்திற்கு சென்று அங்கு 4 கிலோ கஞ்சா வாங்கிக்கொண்டு வந்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனடியாக அவர்களை கைது செய்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குபதிவு செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..