வெகுவிமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் திருவிழா..!
பூலாம்பாடியில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா கடந்த ஜூலை 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது.. விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ அர்ஜுனன் திருக்கல்யாணம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று நாட்டுக்கல் மனக்காட்டிலிருந்து திரளான பக்தர்கள் பால் குடம் மற்றும் அக்னி சட்டி எடுதும் அலகுகுத்தியும் ஊர்வலமாக வந்தனர். ஆலயம் வந்ததும் ஸ்ரீதிரௌபதி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நல்ல தண்ணீர் குளத்திலிருந்து அருளோடு புறப்பட்டுவந்து தீ மிதித்தல் நிகழ்வும், நாளை ஊரணி பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..